top of page
  • Writer's pictureTH-Batticaloa

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் கிளினிக் நோயாளர்களுக்குரிய மருந்துகளை வீடுகளுக்கு வழங்க நடவடிக்கை

Updated: May 10, 2021


தற்போது நாடளாவிய ரீதியில் ஏற்பட்டுள்ள கொரானா வைரஸ் தொற்றுப் பரவல் அதிகரித்து வருவதால் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் தொடர்ச்சியாக மருந்துகளைப் பெற்றுக்கொள்ளும் கிளினிக் நோயாளர்களுக்குரிய மருந்துகளை இன்றுமுதல் (10.05.2021) வீட்டிற்கு கொண்டு வழங்குவதற்கு மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது.


இதற்கமைய நோயாளர்கள் தமக்கான மருந்துகள் முடிவடைந்ததும் அவ் மருந்துகளை பெற்றுக்கொள்ள உடனடியாக தொடர்பு கொண்டு தங்களது பெயர், முகவரி, தொலைபேசி இலக்கம் மற்றும் தங்களது கிளினிக் இலக்கத்துடன், தங்களுக்கு சிகிச்சையளிக்கும் வைத்திய நிபுணரது பெயர் என்பவற்றை வழங்கி உங்களது மருந்துகளை பெற்றுக்கொள்ள முடியும் என போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.


இதற்காக தாங்கள் திங்கள் முதல் வெள்ளிக் கிழமை வரை முற்பகல் 9.00 மணி தொடக்கம் பிற்பகல் 3.00 மணி வரை எமது வைத்தியசாலையின் தொலைபேசி இலக்கங்களான 0653133330 மற்றும் 0653133331 ஆகிய இலக்கங்களுடன் தொடர்பு கொண்டுஉங்களது மருந்துகளைப் பெற்றுக்கொள்ள முடியும். முடியும்.

386 views
bottom of page