TH-Batticaloa
டெங்கு நுளம்புகள் பரவக்கூடிய இடங்கள்
Updated: Jan 31, 2019

டெங்கு நோயை பரவச் செய்யும் 2 வகையான நுளம்புகளான ஈடிஸ் ஈஜிப்டைஸ் மற்றும் ஈடிஸ் எல்பொபிக்டஸ் நுளம்புகள் பல்வேறு விதமான கொல்கலன்களுக்குள் முட்டையிடுவதன் காரணமாக தமது இனத்தை பரப்புவதுடன் அவ்வாறு பரவும் அடங்களை பின்வருமாறு வகைப்படுத்த முடியும்.
அகற்றப்படும் இலகுவில் உக்காத பொருட்கள்.

அகற்றப்படும் உக்கும் பொருட்கள்.

மழைநீர் தேங்கி நிற்கக்கூடிய இடங்கள், தடைப்பட்டுள்ள கூரைப் பீலிகள் மற்றும் கொங்கிரீட் கூரைகள்.
மறைக்கப்படாத நீரைச் சேகரித்து வைக்கும் பாத்திரங்கள் மற்றும் நீர்த்தொட்டிகள்.

நீர் ஒன்றுசேரக்கூடிய வீட்டு அலங்கரிப்புக்குப் பயன்படுத்தும் பல்வேறு பொருட்கள் மற்றும் அலங்கார பாத்திரங்கள்.
விசேடமான வீட்டு உபகரணங்கள்: குளிர்சாதனம் மற்றும் குளிரூட்டி தட்டுக்கள்.

மிருகங்கள் பருகுவதற்காக வைக்கப்பட்டுள்ள சிறிய பாத்திரங்கள், எறும்பு பொறி
செடிகள், செடிகளின் பகுதிகள் மற்றும் மரப் பொந்துகள்.
ஏனையவை.

தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு
சுகாதார,போஷணை மற்றும் சுதேஷ வைத்திய அமைச்சு